நயன்தாராவிற்கு இணையாக சம்பளம் கேட்கும் நடிகை!
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் அவருடைய அயராத முயற்சிதான். தன் முயற்சியாலும், கடின உழைப்பாலும், தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடம் நயன்தாராவிற்குதான்.
அவர் ஒரு படத்திற்கு 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் சமந்தா இருந்தார். ஆனால் அவர் உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் அவரது மார்க்கெட்டும் இப்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த இடத்தை பிடிக்க ஒரு நடிகை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது கீர்த்தி சுரேஷ் தான் இப்போது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்.
இப்போது ஒரு படத்திற்கு ஆறு கோடிக்கு அதிகமாக கீர்த்தி சுரேஷ் சம்பளம் வாங்குகிறார். மேலும் பட வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருப்பதால் நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு வருகிறார். அதுவும் தமிழை விட தெலுங்கில் தான் அவருக்கு பட வாய்ப்பு அதிகமாக குவிந்து வருகிறது.