வாட்டசாட்டமான ஹீரோவை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நடிகை..

வாட்டசாட்டமான ஹீரோவை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நடிகை..
  • PublishedMarch 17, 2024

இளம் ஹீரோ தன்னை காதலிக்கிறார் என நினைத்து அவருடன் நெருங்கி பழகி வந்த பிரபல நடிகையை திடீரென அந்த ஹீரோ ஏமாற்றி விட்டு கம்பி நீட்டி விட்டதாக பகீர் கிளப்பி உள்ளனர். துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான அந்த வாட்டசாட்டமான ஆண் மாடல் போல இருக்கும் நடிகரை பார்த்த பிரபல நடிகை தனது படத்தில் அந்த நடிகரை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமே நீ தான் என நடிகை அந்த நடிகரை வளர்த்து பெரியாளாக்க வேண்டும் என நினைத்து ரொம்பவே நெருக்கமாக பழகியிருக்கிறாராம்.

பிரபல நடிகையே தனது வலையில் விழுந்த சந்தோஷத்தில் நடிகையிடம் அவ்வப்போது ஏகப்பட்ட பொய்களை சொல்லி காசு வாங்கி வந்திருக்கிறார் அந்த நடிகர்.

பல ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் பல பிரபல நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அந்த நடிகை சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், அந்த இளம் நடிகருடன் ஜோடி போட்டு சுற்றி வந்தார்.

அவருடன் இணைந்து நடித்த படம் படுதோல்வியை சந்தித்தாலும் நடிகருக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்த நடிகை நடிகருடன் காதலில் விழுந்திருக்கிறார்.

பிரபல நடிகையின் காதல் கிடைத்தாலும், தனக்கு காசு தான் டார்கெட் என காரியத்துல ரொம்பவே கண்ணாக இருந்திருக்கிறாராம் அந்த நடிகர். அடிக்கடி அம்மாவுக்கு உடம்பு முடியல, அப்பாவுக்கு ஆப்பரேஷன் என சொல்லி நடிகையிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளார் என திடுக்கிட வைக்கின்றனர்.

நடிகையுடன் நெருங்கி பழகி அவ்வப்போது அவரிடம் இருந்து கடனாக கொடுங்க திருப்பிக் கொடுத்துடுறேன். அடுத்த படத்தின் அட்வான்ஸ் வந்தா உடனே அந்த பணம் உன் கையில தான் வரும் என ஆசை வார்த்தைகளை காட்டி வந்தாலும், நடிகைக்கு அதை பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் 1.5 கோடி ரூபாய் வரை அந்த நடிகருக்காக கொடுத்துள்ளாராம்.

நடிகரிடம் கொடுத்த காசு ஒரு பெரிய மேட்டரே அந்த நடிகைக்கு இல்லையாம். ஆனால், திடீரென நடிகைக்கு டாட்டா காட்டி விட்டு வேறு மொழியில் நடிக்க அந்த நடிகர் கிளம்பி விட்ட நிலையில், நடிகருக்கு போன் பண்ணினால் கூட எடுக்க மாட்டேங்கிறாராம். தான் அந்த நடிகரிடம் ஏமாந்து விட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் அந்த நடிகை தற்போது அழுது புலம்பி வருகிறார் என்கின்றனர். அந்த நடிகர் மீது ஆக்‌ஷன் எடுக்கக் கூட நடிகைக்கு மனம் வரவில்லை என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *