LCU- வில் இணையும் அடுத்த படம்… தரமான சம்பவம் லோடிங்…

LCU- வில் இணையும் அடுத்த படம்… தரமான சம்பவம் லோடிங்…
  • PublishedSeptember 23, 2024

லோகேஷ் கனகராஜ் கடந்த 2017ம் ஆண்டு “மாநகரம்” என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தன்னுடைய முதல் திரைப்படத்திலிருந்தே, தனது அழுத்தமான கதை அம்சத்தால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றோர் கனகராஜ் என்றே கூறலாம்.

கடந்த 2019ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் “கைதி” திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த திரைப்படத்திலிருந்து தான் தனது “சினிமாட்டிக் யுனிவர்ஸை” அவர் உருவாக்க தொடங்கினார். “கைதி” திரைப்படத்திற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. தளபதி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் மிக நேர்த்தியாக அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அந்த திரைப்படத்திற்கும் உலகநாயகன் கமல்ஹாசனின் “நம்மவர்” திரைப்படத்திற்கும் கூட ஒரு சிறு தொடர்பு இருந்தது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு 2022ம் ஆண்டு தனது கனவு நாயகனான உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து “விக்ரம்” என்கின்ற மெகா ஹிட் கமர்ஷியல் திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்தார்.

தனது தனித்துவமான எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படங்களுக்காக பெரிய அளவில் போற்றப்பட்ட கமல்ஹாசன், வெகு நாள்கள் கழித்து முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்த படம் விக்ரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து லோகேஷ் தனது சினிமாட்டிக் யுனிவர்சில் தளபதி விஜய் வைத்து “லியோ” என்ற திரைப்படத்தை எடுத்து மெகா ஹிட்டாக்கினார்.

இந்நிலையில் தற்பொழுது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து “கூலி” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் தனது LCU யூனிவெர்ஸ்க்குள் வருமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த சூழலில் தான் சிவகார்த்திகேயனின் “ரெமோ” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக புகழ்பெற்ற பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “பென்ஸ்”. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடத்து வருகிறார்.

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் இந்த திரைப்படமும் லோகேஷின் LCUவோடு தொடர்புடைய கதை என்றும், பிரபல நடிகை பிரியங்கா மோகன் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *