1984இல் பேரழிவை ஏற்படுத்திய விஷ வாயு பேரழிவு… “தி ரயில்வே மேன்”

1984இல் பேரழிவை ஏற்படுத்திய விஷ வாயு பேரழிவு…  “தி ரயில்வே மேன்”
  • PublishedNovember 22, 2023

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள தி ரயில்வே மேன் என்ற வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஷிவ் ராவைல் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், மாதவன், கே கே மேனன், திவ்யேந்து, பாபில் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1984ல் போபாலில் நடைபெற்ற விஷ வாயு பேரழிவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்.

இந்தி உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்ஸின் தமிழ் விமர்சனம் இதோ.

தி ரயில்வே மேன் வெப் சீரிஸ் தமிழ் விமர்சனம் 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற பெருந்துயரம் உலகையே அதிரச் செய்தது. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷ வாயு, அப்பகுதியில் வசித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.

இந்தச் சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் போபால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேறினார்.

அப்போது மிகவும் பரபரப்பாக இருந்த போபால் சம்பவத்தின் தற்போதைய செய்தி வடிவம் இவ்வளவு தான். இதனை முழுமையான வெப் சீரிஸ்ஸாக இயக்கியுள்ளார் ஷிவ் ராவைல். குறிப்பாக யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து கேஸ் லீக்கானது, அப்போது அங்குள்ள மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததை உண்மைக்கு மிக நெருக்கமாக கண் முன்னே காட்டியுள்ளார்.

அதைவிட முக்கியமாக, மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தச் சம்பத்தில் இருந்து உயிர் தப்பியது என்பது தான் தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்ஸின் பிரதான நோக்கமாகும்.

விஷ வாயு வெளியேறும் சில மணி நேரங்களுக்கு முன்பும், அதன் பின்னர் ஒரு நாள் நடந்த சம்பவமும் தான் இந்த வெப் சீரிஸ். கதையின் ஆரம்பத்திலேயே யூனியன் கார்பைடு நிறுவன உரிமையாளர் ஆண்டர்சன் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் அந்த ஆலையில் இருக்கும் கெமிக்கலின் நச்சுத்தன்மை குறித்து சில காட்சிகளில் புரிய வைத்துவிட்டு நேராக கதை பயணிக்கிறது.

யூனியன் கார்பைடு ஆலை அருகே ஒரு குடியிருப்பும், இன்னும் பக்கமாக போபால் ரயில்வே ஸ்டேஷனும் இருக்கிறது. ஆலையில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை வெளியே கொண்டுவருவதில் பத்திரிகையாளர் ஒருவர் தீவிரமாக செயல்படுகிறார். அவருக்கு அதே ஆலையில் வேலைப் பார்த்த இளைஞர் ஒருவரும், சூப்பர் வைசர் ஒருவரும் உதவி செய்கின்றன

மொத்தமே 4 எபிசோட்கள் தான் என்றாலும், போபால் துயரத்தை கச்சிதமாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் ஷிவ் ராவைல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *