“விஜய் – த்ரிஷா” தனியாக இருக்கும் படம் ஒன்று வெளியானது… யார் போட்டது தெரியுமா?

“விஜய் – த்ரிஷா” தனியாக இருக்கும் படம் ஒன்று வெளியானது… யார் போட்டது தெரியுமா?
  • PublishedJune 23, 2024

தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் படம் ரிலீசாகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழாக்கோலமாக மாறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

நேற்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இவருக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதில், “The calm to a storm,The storm to a calm! To many more milestones ahead” எனக் குறிப்பிட்டு, லியோ படத்தின் படப்பிடிப்பின்போது லிஃப்ட்டுக்குள் இருவர் மட்டும் இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய பிறந்த நாளுக்கு த்ரிஷா இன்று வாழ்த்து சொன்னாலும் சிலர் லேட்டா சின்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லி இருக்காங்கப்பா என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த புகைப்படம் இதுவரை இணையத்தில் வெளியாகாத புகைப்படம் என்பதால் ரசிகர்கள் இதுபோல எத்தனை போட்டோஸ் உங்களிடம் உள்ளது. அனைத்து போட்டோக்களையும் தயவு செய்து வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *