இரண்டாவது நாளிலேயே ஆட்டம் கண்ட மாமன்னன் திரைப்படத்தின் வசூல்!
உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படம் கடந்த வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடித்திருந்தனர்.
மேலும் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் படத்தில் பிளஸ் பாய்ண்டாக கூறப்படுவது வடிவேலு மற்றும் பகத் பாசிலின் நடிப்பு. இருவரும் தங்களது முழு நடிப்பு திறனையும் இப்படத்தில் கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.
மேலும் வடிவேலு பாடிய பாடல் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்திருந்தது. ஆனால் சாதியை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளதாக சில மோசமான விமர்சனங்களும் எழுந்தது.
இதன் காரணமாக இரண்டாவது நாள் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் முடிவில் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
ஆகையால் இதுவரை மொத்தமாக 10.75 கோடி வசூலை மாமன்னன் படம் பெற்றிருக்கிறது.உதயநிதி மாமன்னன் படத்தின் மூலம் நல்ல வசூலை பெறலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது நாள் மண்ணை கவ்வி உள்ளது.