பிரபல நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் காலமானார்! அதிர்ச்சி செய்தி
பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் இன்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரையை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி, பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் நேத்திரன்.
சின்னத்திரையை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக அவர் பயணித்து வருகிறார். தன்னோடு சீரியலில் நடித்த தீபா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
தாயான பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்காமல் இருந்த தீபா, அண்மையில் தான் மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
நேத்திரனின் மூத்த மகள் அபிநயா இளம் வயதில் தன்னுடைய தந்தையோடு இணைந்து சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஜோடி நம்பர் 1 என்கின்ற நிகழ்ச்சியின் ஒரு சீசனில் இவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அபிநயா இப்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை அபிநயா வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய தந்தை இப்பொழுது ஐசியூவில் இருப்பதாகவும், எல்லாம் கைமீறி போன நிலைக்கு இப்பொழுது தனது தந்தையின் உடல்நிலை வந்து இருப்பதாகவும் கூறினார்.
தனது தந்தைக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இனி மக்களாகிய உங்களுடைய பிரார்த்தனை தான் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கண்கலங்கி ஒரு பதிவினை அவர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேத்ரன், தற்பொழுது சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.