வேட்டையன் ராஜா வந்துவிட்டார்….. இதோ வெளிவந்தது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வேட்டையன் ராஜா வந்துவிட்டார்….. இதோ வெளிவந்தது பர்ஸ்ட் லுக் போஸ்டர்
  • PublishedJuly 31, 2023

18 ஆண்டுகளுக்குப் பின் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பி.வாசு தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இதில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான பின்னணி பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 31) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *