”இராவண கோட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

”இராவண கோட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!
  • PublishedMarch 15, 2023

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

அண்மையில் இந்த திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஜீ.வி பிரகாஷ் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *