விஜயும், சஞ்சய் தத்தும் நேருக்கு நேர் மோதும் புதிய போஸ்டர்

விஜயும், சஞ்சய் தத்தும் நேருக்கு நேர் மோதும் புதிய போஸ்டர்
  • PublishedSeptember 21, 2023

விஜயும், சஞ்சய் தத்தும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜயும், படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்தும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனால், உற்சாகம் அடைந்த ரசிகர்கள் போஸ்டரை டிரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *