10 மாதத்திற்கு பின் OTT-யில் ரிலீஸ் ஆகும் ‘தி கேரளா ஸ்டோரி’

10 மாதத்திற்கு பின் OTT-யில் ரிலீஸ் ஆகும் ‘தி கேரளா ஸ்டோரி’
  • PublishedFebruary 7, 2024

கடந்த ஆண்டு இயக்குனர் Sudipto Sen இயக்கத்தில்,  வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. சர்ச்சையான கதைக்களத்தில் உருவான இந்த படத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

திரைப்படம் வெளியான ஒரே நாளில் தமிழக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதோடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்த படம் குறித்து, இயக்குனர் சுதிப்டோ சென் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னரே… பல திரையரங்குகளில் உரிய போலீஸ் பாதுகாப்புடன் இப்படம் போடப்பட்டது.

சர்ச்சைகளுக்கு மத்தியில், ஒளிபரப்பானாலும் இப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

திரைப்படம் வெற்றிகரமாக தி ரையரங்கில் வசூல் வேட்டை நடத்திய போதிலும், இப்படத்தை ஓடிடி உரிமையை வாங்கவும், இப்படத்தை ஓடிடியில் வெளியிடவும் சில சிக்கல்கள் ஏற்பட்டது.

ஆனால் இப்படம் வெளியாகி சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம், ஜீ 5 ஓடிடி தளத்தில்… பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையரங்கில் பார்க்க மிஸ் செய்த ரசிகர்கள் பலர் ஓடிடி-யில் பார்க்க ஆவலோடு கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *