வாய்ப்பில்லாமல் சீரியலுக்கு வரும் முன்னணி நடிகர்!

வாய்ப்பில்லாமல் சீரியலுக்கு வரும் முன்னணி நடிகர்!
  • PublishedJune 29, 2023

நடிகர் தாடி பாலாஜி  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சில காலம் விஜய் டீவீயில் ஒளிபரப்பாகிய சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இந்த சூழலில் இப்போது  விஜய் டிவி சீரியலில் இறங்கி இருக்கிறார். கண்டிப்பாக பாக்கியலட்சுமி தொடரில் அவரது ட்ராக் காமெடியை நோக்கி தான் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் பழனிச்சாமி மற்றும் தாடி பாலாஜி இருவரும் இணைந்து கோபியை கதி கலங்க வைக்க உள்ளனர். இதன் மூலமாவது பாக்கியலட்சுமி தொடர் சூடு பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறது.

தாடி பாலாஜி இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இதன் மூலம் மீண்டும் வெள்ளிதிரையில் கால் பதிக்க வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *