சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படமான தளபதி 69 படத்தின் அப்டேட்

சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படமான தளபதி 69 படத்தின் அப்டேட்
  • PublishedSeptember 13, 2024

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். சினிமாவை விட்டு விஜய் விலகப்போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அரசியல் களத்தில் விஜயின் செயல்பாடுகளை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

மேலும், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், விஜயை திரையில் பார்த்து கொண்டாடப்போகும் அந்த கடைசி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.

சில நாட்களுக்கு முன் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளது உறுதியானது. படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இதனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் தற்போது விஜயின் ‘தளபதி 69’ படத்தின் மீது தான் உள்ளது. படம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில், விஜய் ரசிகர்களை குதூகலிக்கும் வகையில் ‘தளபதி 69’ குறித்த முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தை தயாரிக்கவுள்ள KVN தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு தாங்கள் இயக்கப்போகும் முதல் தமிழ் படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *