லியோவுக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை… இப்ப என்ன தெரியுமா?

லியோவுக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை… இப்ப என்ன தெரியுமா?
  • PublishedOctober 17, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் பல திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ‘லியோ’ திரைப்படத்தின் ஒருவார வசூலில் 75 சதவீதம் தயாரிப்பு நிறுவனம் கேட்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதில் சுமூகமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *