இரண்டாம் பாகம் வேறயா : ருத்ரன் படத்தை பங்கமாக களாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

இரண்டாம் பாகம் வேறயா : ருத்ரன் படத்தை பங்கமாக களாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
  • PublishedApril 16, 2023

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ருத்ரன் திரைப்படத்தை வைத்து செய்துள்ளார்.

ருத்ரன் படத்தின்  கதை என்னவென்றால் வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கும் இளைஞர்களின் பெற்றோர்களை கொன்று அவர்களிடம் சொத்துக்களை அபகரிப்பது தான்.

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியிருக்கும் மாறன், ஆரம்பத்தில் இருந்தே சொதப்பல்கள் இருந்ததாகவும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

லாரன்ஸுக்கு பேய் படமாக இருந்தால் தான் ஓடும் என்று யாரோ சொல்லி இருப்பார்கள் போல. கடைசியில் பேய் பிடித்தவர் போல காந்தாரா படத்தில் இடம் பெற்ற சண்டைக்கு காட்சிகளில் தும்சம் செய்கிறார். ட்ரைலரை பார்க்கும் போதே இந்த படம் எப்படி இருக்கும் என்பது தெரிந்தது.  ருத்ரன் படம் முடியும்போது இரண்டாம் பாகம் வருவது போல லீட் வைத்திருக்கிறார்கள்.

அதை பார்த்த உடனே பக் என்ற ஆகிவிட்டது. முதல் பாகமே பார்க்க முடியவில்லை இதில் இரண்டாவது பாகமா முடியல சாமி என எவ்வளவு முடியுமோ அவ்வளவு வச்சு செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *