டிஆர்பி-யில் டாப் டக்கர் சாதனை படைத்த பிக்பாஸ் 7வது சீசன்…

டிஆர்பி-யில் டாப் டக்கர் சாதனை படைத்த பிக்பாஸ் 7வது சீசன்…
  • PublishedNovember 28, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதுவரை இந்நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதன் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசன் பல்வேறு புதுமைகளுடன் ஆரம்பமானது. அதன்படி இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறின.

ஆரம்பத்தில் ஜோவிகா – விசித்ரா இடையேயான கல்வி முக்கியத்துவம் பற்றியான சண்டை, பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்‌ஷன், விசித்ரா சொன்ன பாலியல் புகார், நிக்சன் வினுஷாவை உருவகேலி செய்தது என ஏராளமான விஷயங்கள் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தன.

இதன்காரணமாக தான் இந்த சீசன் டிஆர்பி-யும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இந்த சீசன் தொடங்கும் போது, இதன் TRB புள்ளிகள் 6 ஆக இருந்தது. ஆனால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய 45-வது வாரத்தில் இதன் TRB புள்ளிகள் 6.7 ஆக உயர்ந்தது.

இதையடுத்து ரெட் கார்டு விஷயத்தில் போட்டியாளர்கள் இடையே நடந்த மோதல் காரணமாக ஒருவாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி அனல்பறந்தது.

அதன் காரணமாக 46-வது வாரத்தில் அந்நிகழ்ச்சியின் TRB புள்ளிகள் 6.9 ஆக உயர்ந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *