தங்கலான் – ரிலீஸ் தேதியுடன் விரைவில் வருகின்றது 1.30 நிமிட டீசர்

தங்கலான் –  ரிலீஸ் தேதியுடன் விரைவில் வருகின்றது 1.30 நிமிட டீசர்
  • PublishedOctober 26, 2023

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் வெளியாகும் தங்கலான் டீசருடன், ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என பிஸியாக இருந்த விக்ரம், PS 2 ரிலீஸுக்கு முன்னரே பா ரஞ்சித்துடன் இணைந்தார். அதன்படி, விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தங்கலான் என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆனது.

இந்தப் படம் கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகிறது. இதற்காக விக்ரம் ரொம்பவே வித்தியாசமான கெட்டப்புக்கு மாறியுள்ளார்.

தங்கலான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விக்ரமின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகின. இதனால் படத்தில் விக்ரமின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்கலான் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த டீசர் 1.30 நிமிடம் இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *