சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகரின் லீலை… பண்ணை வீட்டில் கெஞ்சிய நடிகை

சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகரின் லீலை… பண்ணை வீட்டில் கெஞ்சிய நடிகை
  • PublishedJanuary 18, 2025

தமிழ் சினிமாவில் ஒருகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் அந்த நடிகர். அவர் இல்லாவிட்டால் படங்கள் ஓடாது என்கிற நிலையெல்லாம் இருந்தது. அதற்கேற்றபடி நடிகரும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வெரைட்டியான நடிப்பை காண்பித்து ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தினார்.

அதேசமயம் சர்ச்சைகளிலும் சிக்க தவறவில்லை அவர். இந்தச் சூழலில் பண்ணை வீட்டுக்கு நடிகைகளை அவர் கொண்டு செல்லும் கிசுகிசு கோலிவுட்டில் டாப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கோலிவுட்டில் எத்தனை நடிகர்கள் வந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், வரவும் இருக்கிறார்கள். ஆனால் இந்த நடிகர் தமிழில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.

ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் இவர். பெரும் விநியோகஸ்தராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் இருந்த ஒருவர்தான் இந்த நடிகரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

இவர் நடிக்க வந்தபோது டாப்பில் இருந்த நடிகருக்கு பிடிக்காமல் போக ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து இவரை அடிக்கவெல்லாம் செய்தார்.

அதையெல்லாம் தாங்கிக்கொண்டார் இந்த நடிகர். யார் என்னை அடித்தாலும், மிதித்தாலும் என்னுடைய வளர்ச்சியை தடுக்க முடியாது என்று தனது மனதுக்குள் வைராக்கியம் கொண்டு கிடைக்கும் ரோல்கள் அத்தனையையும் செய்தார்.

அப்படி அவர் நடித்த ரோல்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக எந்த நடிகர் இவரை உதைத்தாரோ அவரைவிடவும் இவரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்பதுதான் உண்மை.

படிப்படியாக வளர்ந்து வந்த இவர் ஒருகட்டத்தில் அசுர பாய்ச்சலில் உயரம் நோக்கி சென்றார். மிகப்பெரிய நடிகர்கள்கூட இவரின் கால்ஷீட்டை முதலில் வாங்கிவிட முண்டியடித்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இந்த நடிகர் இல்லாமல் ஒரு தமிழ் சினிமாகூட இல்லை என்கிற நிலை உருவானது.

இவரும் தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காண்பித்து நடித்தார். எப்படி இவரால் மட்டும் இப்படி அசால்ட்டாக நடிக்க முடிகிறது என்று பலரும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றார்கள்.

ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் வளரும். அதுபோல்தான் இவருக்கும். தன்னை வளர்த்துவிட்டவர்களையே ஒருகட்டத்தில் மதிக்காமல் இருந்தார் இவர். பிறகு சில பஞ்சாயத்துக்கள் வந்ததன் காரணமாக சினிமாவிலிருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்டார்.

நிலைமை இப்படி இருக்க அவரை சுற்றியிருந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஒருவழியாக தீர்ந்ததால் இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இவர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினாலும் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதாவது நடிகர் குடி பழக்கத்தில் ஊறி திளைத்தவராம். அதுமட்டுமின்றி பெண்கள் விஷயத்தில் ஓவர் ஆட்டம் போடுபவராம்.

தான் பீக்கில் இருந்தபோது தன்னுடைய இள வயதில் எந்த நடிகையை எல்லாம் பார்த்து ரசித்தாரோ அந்த நடிகைக்கு எந்த வயதாக இருந்தாலும் பணம் கொடுத்து பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அனுபவிப்பாராம். அப்படி இவரிடம் சிக்கி சின்னாபின்னமான மூத்த நடிகைகள் லிஸ்ட் பெரிதாக இருக்கிறதாம்.

மூத்த நடிகைகள் மட்டுமின்றி இள நடிகைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் என யாரையும் விட்டு வைப்பதில்லையாம். முதல் இன்னிங்ஸில்தான் அப்படி இருந்தார் என்றால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அப்படித்தான் இருக்கிறாராம். சமீபத்தில்கூட தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு நடிகை மீது இவருக்கு கண் பட்டதாம்.

உடனடியாக அந்த நடிகைக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்கள் வைத்திருந்தாராம். அந்த நடிகை கெஞ்சி கதறிய பிறகே பண்ணை வீட்டிலிருந்து அவரை ரிலீஸ் செய்தாராம் நடிகர். இன்னும் எத்தனை நடிகைகள் இவரிடம் சிக்கப்போகிறார்களோ என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *