திருமணம் செய்ய மறுத்த பிரபல தொகுப்பாளரை கடத்திய பெண்… பரபரப்பு தகவல்

திருமணம் செய்ய மறுத்த பிரபல தொகுப்பாளரை கடத்திய பெண்… பரபரப்பு தகவல்
  • PublishedFebruary 25, 2024

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர்களை மக்கள் பெரிய அளவில் கொண்டாடி வரும் நிலையில் தெலுங்கு சினிமாவின் தொகுப்பாளர் ஒருவருக்கு சோகமான விஷயம் ஒன்று நடந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் இளம் தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரனாவ். இவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், பிரபலமாகவும் உள்ளார்.

திரிஷா போகிரெட்டி என்ற பெண் Matrimony பக்கத்தில் பிரனாவ் புகைப்படம் மற்றும் தகவல் இருப்பதை கண்டவர், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார், அதற்காக அவரை அணுகியுள்ளார்.

ஆனால் பிரனாவ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுக்க, இதனால் கோபத்தில் அந்த பெண் பிரனாவை கடத்தியுள்ளார்.

தனது அலுவலகத்தில் 4 அடியாட்களை வைத்து அடித்துள்ளார். ஆனால் எப்படியோ அங்கிருந்து பிரனாவ் தப்பித்து போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தற்போது இந்த தகவல் ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *