டபுள் மடங்கு லாபம்… 72 வயதிலும் மாஸ் காட்டும் மம்மூட்டி

டபுள் மடங்கு லாபம்… 72 வயதிலும் மாஸ் காட்டும் மம்மூட்டி
  • PublishedFebruary 25, 2024

மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரமயுகம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை 10 நாட்களில் நடத்தியிருக்கிறது.

டைரக்டர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான இந்த ஹாரர் திரைப்படத்தை இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளத்தில் வெற்றிப் பெற்ற இந்த படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கல்லா கட்டி வருகிறது.

கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியது தான் இந்த படம் இந்தளவுக்கு வெற்றி பெற காரணமே என்கின்றனர்.

இயக்குநர் ராகுல் சதாசிவன் பூத காலம் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை மிரட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அவர் சொன்ன கதை பிடித்து போய் மம்மூட்டி இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெளியான பிரம்மயுகம் திரைப்படம் மலையாள ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படத்தின் பட்ஜெட் 27 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்மூட்டியின் சம்பளம் மட்டும் இந்த படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர்.

மம்மூட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், அமல்டா லிஸ் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மயுகம் திரைப்படம் முதல் நாள் 3.30 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், படிப்படியாக வசூல் அதிகரித்தது. படத்தின் காட்சிகளும் அதிகரித்த நிலையில், 10 நாட்களில் 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து 72 வயதிலும் பல வெற்றிப் படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார் மம்மூட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *