“ராயனின் உலகத்தில் துஷாரா விஜயன்” தனுஷ் இன்று வெளியிட்ட அப்டேட்

“ராயனின் உலகத்தில் துஷாரா விஜயன்” தனுஷ் இன்று வெளியிட்ட அப்டேட்
  • PublishedFebruary 24, 2024

நடிகர் தனுஷின் இயக்கத்தில் அவரது 50ஆவது படமாக உருவாகியுள்ள படம் ராயன். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் நடிகர்களை அவர்களின் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார் தனுஷ்.

ராயன் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவகித சூட்டிங்கையும் முடித்துள்ளார் தனுஷ்.

இந்தப்படத்தை முற்றிலும் இளைஞர்களை கொண்டு இயக்கியுள்ளார். இதனிடையே தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார்.

கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள ராயன் படத்தில் அவருடன் சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் தம்பிகளாக நடித்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படத்தில் துஷாரா விஜயனின் கேரக்டர் லுக் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான லுக்கில் அவர் அழுத்தமாக அதே சமயம் மிகவும் சோகமான லுக்கில் இந்த போஸ்டரில் காணப்படுகிறார்.

வானத்தை நோக்கி அவர் பார்ப்பதாக இந்த லுக் காணப்படுகிறது. ராயனின் உலகத்தில் துஷாரா விஜயன் என்று கேப்ஷனில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *