தியேட்டரில் பறிபோன உயிர்… அல்லு அர்ஜூன் மீது வழக்கு! போலீசார் அதிரடி
ஐதராபாத் தியேட்டரில் பெண் பலியான சம்பவத்தில் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்படும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா – ஃபகத் ஃபாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் ரிலீஸானது. ஐதராபாத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கினர்.
அதிகாலை வெளியான இப்படத்தைப் பார்க்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் கூடினர்.
ரசிகர்கள் படத்தைப் பார்த்து எப்படி உணர்கிறார்கள் என்பதைக் காண தியேட்டருக்கு நேரில் வந்தார்.
ஐதராபாத் தில்சுக் நகரைச் சேர்ந்த ரேவதி, தனது கணவர், குழந்தைகளுடன் RTC சாலையில் உள்ள தியேட்டருக்கு புஷ்பா தி ரூல் படத்தைக் காண வந்தார்.
ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது நெரிசல் ஏற்பட்டது. இதில், ரேவதியும் அவரது மகனும் மயங்கி விழுந்தனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது சர்ச்சையானது, ரேவதியின் கணவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அல்லு அர்ஜூன் & தியேட்டர் மேனேஜர் மீது வழக்குப் பதி செய்யப்படும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
போலீசிடம் அறிவிக்காமல் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு விசிட் அடித்ததும், உரிய பாதுகாப்பை தியேட்டர் நிர்வாகம் தராததும் தான் இந்தச் சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.