அல்லு அர்ஜூன் விவகாரம் – தெலுங்கு திரையுலகினரின் அதிரடி நடவடிக்கை

அல்லு அர்ஜூன் விவகாரம் –  தெலுங்கு திரையுலகினரின் அதிரடி நடவடிக்கை
  • PublishedDecember 26, 2024

தெலுங்கு திரையுலகின் 36 பேர் கொண்ட குழுவினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர். அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார்.

அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.

இந்த குழுவில் நடிகர்கள் வெங்கடேஷ், நிதின், வருண் தேஜ், சிவ பாலாஜி, இயக்குனர்கள் திரி விக்ரம், ஹரிஷ் சங்கர், அணில், பாபி, வம்சி, தயாரிப்பாளர்கள், அல்லு அரவிந்த், டக்குபதி சுரேஷ், சுனில், சுப்ரியா, நாகவம்சி உள்ளிட்டோர் இருந்தனர்.

இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *