லியோ இசை வெளியீடுக்காக காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…
விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அடுத்தடுத்து புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
முக்கியமாக இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் யாருக்கும் அனுமதி இல்லை என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், ரசிகர்களுக்கும் பெரிதாக அனுமதி இருக்காது என்றே செய்திகள் வெளியாகின்றன. அதாவது முழுக்க முழுக்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேரு ஸ்டேடியத்தில் 6000 பேர் வரை மட்டும் நிகழ்ச்சியை காண முடியும் என்பதால், ரசிகர்களுக்கும் அனுமதி கிடைப்பது சந்தேகம் தானாம். லியோ படக்குழுவினரும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் மட்டுமே இதில் கலந்துகொள்ள உள்ளார்களாம்.
சில தினங்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில், நிர்வாகிகளை சந்தித்துள்ளார் விஜய். அப்போது லியோ இசை வெளியீட்டு விழா பற்றிதான் ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய் வழக்கமாக குட்டி ஸ்டோரியுடன், தனது அரசியல் என்ட்ரி குறித்து பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பத்திரிகைகளுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிகிறது.
லியோ இசை வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள், தற்போது தங்களுக்கு அனுமதி கிடைக்காது என்ற ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிக ஆர்வத்துடன் ரெடியாகி வருகிறார்களாம். முக்கியமாக லியோ இசை வெளியீட்டு விழாவில், விஜய் மக்கள் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என்றும், தொண்டர்கள் கூட உள்ளே செல்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.