இயக்குனர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் – மிஷ்கின்!

இயக்குனர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் – மிஷ்கின்!
  • PublishedJuly 4, 2023

இயக்குனர் மடோன் அஸ்வினை, மிஷ்கின்  பாராட்டி பேசியுள்ளார். மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,  இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் தன்னை வைத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

அதாவது ஒரு இயக்குனர் நடிகராக இருக்கும் போது பல்வேறு சிக்கலை சந்திக்க நேரிடும். ஸ்கிரிப்ட் தனது கையில் இருப்பதால் இந்த காட்சியை இப்படி எடுக்கலாம் என்று தனக்கு தோன்றும்.

ஆனால் மடோன் அஸ்வின் வேறு மாதிரியாக எடுப்பார். அப்போது அவரை அழைத்து இந்த காட்சியை இப்படி எடு என்று சொன்னால் எல்லாத்துக்கும் தலையாட்டுவான்.

ஆனால் கடைசியில் போய் பார்த்தால் அவன் விருப்பப்படி தான் அந்த காட்சியை எடுத்திருப்பான். ஒரு இயக்குனர் என்பவன் இப்படி தான் இருக்க வேண்டும்.

தான் ஒரு விஷயத்தை இப்படிதான் எடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதிலிருந்து யார் சொன்னாலும் பின் வாங்க கூடாது.

அந்த விஷயத்தில் மடோன் அஸ்வினை தனக்கு மிகவும் பிடித்ததாக மிஷ்கின் புகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் 30,  40 வருஷத்திற்கு படங்களை மடோன் அஸ்வின் இயக்குவார்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *