இது விஜயின் கடைசி படம் இல்லையா? செம்ம ஹேப்பியில் ரசிகர்கள்

இது விஜயின் கடைசி படம் இல்லையா? செம்ம ஹேப்பியில் ரசிகர்கள்
  • PublishedJune 22, 2025

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவர் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி தீவிர ரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துவிட்ட நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் படம் தான் அவர் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகிறது.

அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 9 பொங்கல் ரிலீசுக்கு படத்தை தயார் செய்து வருகின்றனர்.

ஜன நாயகன் படத்தில் விஜய் உடன் மமிதா பைஜூ ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். ஷூட்டிங் கடைசி நாளில் விஜய் உடன் பேசும்போது “ஜனநாயகன் தான் உங்கள் கடைசி படமா” என கேட்டாராம் மமிதா.

“தெரியல. தேர்தல் முடிவுக்கு பிறகு பார்க்கலாம்” என விஜய் கூறினாராம். விஜய் சொன்ன இந்த பதிலால் அவர் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *