உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம் : உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்த ரகசியத்தை பகிரங்கமாக போட்டு உடைத்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை தட்டி தூக்கிய மகாநதி படத்தில் தன்னுடைய உடல் எடையை ஏற்றினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.
அதுவரை எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளாத கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்.
ஆனால் இவர் அனுஷ்கா போலவே தனது கேரியரை தொலைத்து விடாமல் சுதாரித்துக் கொண்டு மளமளவென ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உடல் எடையை குறைத்தார்.
இவர் ஆப்ரேஷன் செய்துதான் ஸ்லிம்மானதாக பலரும் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஒன்பது மாத கடின உடற்பயிற்சியின் மூலமாகத்தான் உடல் எடையை குறைத்ததாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.