தீபாவளி ரேஸில் முதலிடத்தில் SK… ஜெயம் ரவிய கூட ஓரங்கட்டடியாச்சி…
நடிகர் சிவகார்த்தில்கேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகின்ற அதேநேரத்தில் கவனிக்கத்தகுந்த நடிகராக உள்ளார். இவரது படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றாலே தியேட்டருக்கு குடும்ப ரசிகர்கள் வருவார்கள் என நம்பலாம்.
இதுவரை இவரது படங்களில் கோரமான சண்டைக் காட்சிகளோ அல்லது ஆபாச காட்சிகளோ இடம் பெற்றதில்லை. மேலும் சிவகார்த்திகேயன் இதுவரை தனது படங்களில் ஒரு காட்சியில் கூட புகைப்பிடிப்பதைப்போல் நடிக்கவில்லை.
இப்படியான விஷயங்களும் குடும்ப ரசிகர்கள் இவரது படத்திற்கு அதிகம் வர காரணம். இப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மன்னனாக மாறியுள்ளார்.
வெறுமனே நடிகராக மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் தனக்குள் ஒரு நல்ல பிசினஸ் மேன் சிந்தனையைக் கொண்டிருக்கின்றார் என்று கூறும் அளவிற்கு அவரது, செயல்பாடுகள் இருக்கின்றது என்றே கூறலாம்.
சிவகார்த்திகேயன் ஒரு பிலாஃப் கொடுத்தால், உடனே அதனை மறக்கடிக்க மாபெறும் ஹிட் படத்தைக் கொடுத்து விடுகின்றார். இப்படியான நிலையில்தான் சிவகார்த்திகேயன் தற்போது ஜெயம் ரவியுடன் தீபாவளிக்கு மோதுகின்றார் என்றே கூறலாம்.
இன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள, சிவகார்த்திகேயனின் அமரன் படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ள ஜெயம் ரவியின் பிரதர் படத்தை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிற்கு வெளியேவும், வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் உடன் படத்தினை ரிலீஸ் செய்து, அதில் தோல்வியைத் தவிர்த்துள்ளார் என்றே சொல்லவேண்டும். அதேபோல் இப்போது தீபாவளிக்கு ஜெயம் ரவி உடன் படத்தினை ரிலீஸ் செய்துள்ளார். படத்தினை வெளிநாடுகளில் பார்த்த ரசிகர்கள், அமரன் படம் பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறும் எனக் கூறி வருகின்றார்கள்.
ஜெயம் ரவி படத்திற்கு போதுமான அளவிற்கு பிரமோஷன் செய்யாததால், படக்குழுவினருக்கே படத்தின் மீது பெரிய அளவிற்கு நம்பிக்கை இல்லை என திரைத்துறையினர், பேசத்தொடங்கிவிட்டனர். இப்படி இருக்கும்போது, இன்று படத்தின் விமர்சனத்தினைப் பார்க்கும்போது, அமரன் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறும் என பேச்சுகள் இப்போதே தொடங்கியுள்ளது. இது இந்த ஆண்டு தீபாவளி வின்னர் சிவகார்த்திகேயனின் அமரன் என திரையுலகம் முடிவு செய்துவிட்டது என பேச்சுகள் அடிபடுகின்றது.