த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பார்ட்.. 18 வருடத்திற்கு பின் 68 வயது நடிகருடன் ஜோடி.. கோடியில் சம்பளம்

த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பார்ட்.. 18 வருடத்திற்கு பின் 68 வயது நடிகருடன் ஜோடி.. கோடியில் சம்பளம்
  • PublishedFebruary 5, 2024

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பின்னர், படு பிஸியான ஹீரோயினாக மாறி உள்ள நடிகை திரிஷா, தற்போது 68 வயது நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக 18 வருடங்களுக்குப் பின் நடிக்க உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் குணச்சித்திர நடிகையாக முகமாகி, அமீர் இயக்கிய ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2002 ஆம் ஆண்டு அவதாரம் எடுத்தவர் திரிஷா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்த திரிஷா, பாலையா, சிரஞ்சீவி, ரவி தேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கடந்த 2006 ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் ஸ்டாலின். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, பிரேமானந்தா, ரியாஸ் கான், சுனில், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ‘சாணக்கியா’ படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாக்கின. மேலும் த்ரிஷா இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி பின்னர் ஒரு சில காரணங்களால் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து தற்போது திரிஷாவின் கைவசம் ராம், ஐடெண்டிட்டி, என்கிற இரண்டு மலையாள படங்கள் உள்ளன. இதை தவிர மணிரத்தினம் கமலஹாசனை வைத்து இயக்கி வரும் ‘தக் லைஃப்’ ஆகிய படங்கள் உள்ளன.

மேலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக சுமார் 18 வருடங்களுக்கு ‘விஸ்வம்பரா’ என்கிற படத்திலும் திரிஷா நடிக்க கமிட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *