குவைத்தில் லால் சலாம் படத்திற்கு தடை விதிப்பு

குவைத்தில் லால் சலாம் படத்திற்கு தடை விதிப்பு
  • PublishedFebruary 5, 2024

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையப்படுத்தி அதில் நுழைந்துள்ள மத அரசியலை சுற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் நிஜ கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

அதே சமயம் இந்த படம் குவைத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மதம் சார்ந்து வெளியாகும் படங்களை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து கொண்ட படங்களை திரையிடும் விஷயத்தில் குவைத் நாடு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

லால் சலாம் படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டு உள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *