விஜயின் இடத்தைப் பிடிக்க முண்டாசு கட்டிய 5 நடிகர்கள்… யார் தெரியுமா?

விஜயின் இடத்தைப் பிடிக்க முண்டாசு கட்டிய 5 நடிகர்கள்… யார் தெரியுமா?
  • PublishedFebruary 5, 2024

விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அது மட்டுமல்லாமல் தான் ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முழுமையாக மக்கள் பணியில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் முதற்கொண்டு திரை உலகில் பலருக்கும் பேரதிர்ச்சியாக தான் இருந்தது.

ஆனால் தற்போது நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க முண்டாசு கட்டிய 5 நடிகர்களை பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.

சூர்யா: விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் இவர் அவருடன் இணைந்து சில படங்களில் பயணித்திருக்கிறார். ஆனாலும் அவரால் விஜய், அஜித் அளவுக்கு ஒரு அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை. தற்போது கங்குவாவை நம்பி வரும் அவர் விஜய் சினிமாவை விட்டு விலகியதால் பெரும் குஷியில் இருக்கிறாராம்.

விஜய் சேதுபதி: என்னதான் எதார்த்தமான நடிகராக இருந்தாலும் ஹீரோவாக இவரால் ஒரு அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வில்லனாகவும் கலக்கி வரும் இவர் விஜய்யின் இடம் காலியானதால் அந்த இடத்தை பிடிக்க ரேஸுக்கு தயாராகி இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தனுஷ்: நடிப்பு அசுரனாக கலக்கி கொண்டிருக்கும் இவருடைய படங்களுக்கு எப்போதுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் கிடைக்கும். ஆனால் விஜய் பட அளவுக்கு இவருடைய படத்தின் வியாபாரம் இருப்பதில்லை. தற்போது விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் அந்த இடத்திற்கான போட்டியில் இவரும் இருக்கிறார்.

சிம்பு: குழந்தையிலிருந்து நடித்து வரும் இவர் இடையில் பல தோல்வி படங்களை கொடுத்து துவண்டு போயிருந்தார். அதை எல்லாம் ஓரங்கட்டி தற்போது நடிப்பில் தீவிரம் காட்டியிருக்கும் இவர் கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பெருமளவில் நம்பி இருக்கும் சிம்பு விஜய் அரசியலுக்கு சென்றதில் குஷியாக தான் இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: இவர் விஜய் இடத்தை பிடிக்க பார்ப்பதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி பல விஷயங்களில் இவர் விஜய்யை ஃபாலோ செய்து வருகிறார். தற்போது விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அந்த இடம் நமக்குத்தான் என்று சிவகார்த்திகேயன் குத்தாட்டம் போட்டு வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *