காதல் எப்போதுமே வெற்றி பெறும்… திரிஷா

குட் பேட் அக்லி, தக்லைப், சூர்யா 45 மற்றும் ராம், விஸ்வாம்பரா போன்ற படங்களில் நடித்து வரும் திரிஷா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவரை 7 மில்லியனுக்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டா பக்கத்தில் பட்டுப் புடவை கட்டி, தலையில் மல்லிகைப்பூ சூடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திரிஷா.
அந்த புகைப்படத்தை மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள். அதோடு, காதல் எப்போதுமே வெற்றி பெறும் என்று ஒரு பதிவும் போட்டு உள்ளார் திரிஷா.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலதரப்பட்ட கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.