திரிஷா பற்றிய உண்மையை போட்டுடைத்தார் திரிஷாவின் அம்மா
நாயகியாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பா நடிச்சிட்டு இருக்காங்க திரிஷா. ஒரு கட்டத்துல கல்யாணம் நிச்சயமாகி, மாப்பிள்ளை நடிக்கக் கூடாதுன்னு சொன்னதால திரிஷா அந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னு கூட கோலிவுட்ல பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில, திரிஷா நடிப்பை விட்டு விலகப் போறாங்கன்னு சமீபத்துல ஒரு வதந்தி பரவிச்சு. நடிப்பை விட்டுட்டு, நடிகர் விஜய் ஆரம்பிச்ச தமிழக வெற்றிக் கழகத்துல திரிஷா சேரப் போறாங்கன்னு பேச்சு அடிபட்டுச்சு.
ஆனா, இந்த வதந்தியை நடிகை திரிஷாவோட அம்மா உமா கிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்திருக்காங்க.
திரிஷா நடிப்பை விட மாட்டாங்க என்றும் அரசியலுக்கும் போக மாட்டாங்கன்னும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் அளித்த பேட்டியில சொல்லிருக்காங்க.
திரிஷா தொடர்ந்து சினிமாலயே தொடர்வாங்கன்னும் அவருடைய அம்மா உறுதிப்படுத்தியிருக்காங்க. இப்போ அரை டஜன் படங்களுக்கு மேல திரிஷா நடிச்சிட்டு இருக்காங்க. சில படங்கள் ரிலீஸுக்காக வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..