உலக சாதனை படைத்த திரிஷா படம்… ஜோடி யாருனு தெரியுமா?

உலக சாதனை படைத்த திரிஷா படம்… ஜோடி யாருனு தெரியுமா?
  • PublishedMarch 19, 2025

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு தற்போது வயது 40ஐ கடந்துவிட்டாலும் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

திரிஷா நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதுதவிர மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார் திரிஷா. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் திரிஷா, அங்கு சிரஞ்சீவி உடன் விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை திரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.

அதுவும் டிவியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்கிற சாதனையை அப்படம் படைத்துள்ளது. அப்படம் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி உள்ளதாம். உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டதில்லையாம்.

இப்படி ஒரு அரிய சாதனையை படைத்த படத்தின் பெயர் அதடு. இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படத்தை திரிவிக்ரம் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருந்தார்.

இப்படம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ.30 கோடி வசூல் செய்து அசத்தியது. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பஞ்ச் வசனங்களும், மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன் கூடிய பக்கா கமர்ஷியல் படமாக இது உள்ளதால் தான் எத்தனை முறை போட்டாலும் இப்படம் டிஆர்பி-யில் கெத்து காட்டி வருகிறது.

அதடு படத்தை ரீ-ரிலீஸ் செய்யக்கோரியும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இப்படம் ஸ்டார் மா சேனலில் தான் அதிகமுறை ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *