த்ரிஷாவின் புதிய Valentine.. யார் தெரியுமா? வைரலாகும் த்ரிஷாவின் பதிவு

த்ரிஷாவின் புதிய Valentine.. யார் தெரியுமா? வைரலாகும் த்ரிஷாவின் பதிவு
  • PublishedFebruary 15, 2025

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் லியோ படம் வெளியாகிருந்த நிலையில் இப்போது விடாமுயற்சி படம் வெளியாகியிருக்கிறது.

ஆனால், இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜூன், ஆரவ், த்ரிஷா, ரெஜினா ஆகியோரது நடிப்பில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது வரையில் ரூ.125 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 மற்றும் ராம் விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் காதலர் தினமான நேற்று த்ரிஷா பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் புது valentine என பதிவிட்டு தன்னுடைய புது நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டிக்கு Izzy என பெயரிட்டுள்ளார். My forever Valentine என்று அந்த நாய்க்குட்டி பற்றி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் த்ரிஷா ஆசை ஆசையாக வளர்ந்து வந்த Zorro என்ற நாய்க்குட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து மன வருத்தம் அடைந்த த்ரிஷா இப்போது காதலர் தினத்தன்று தன்னுடைய வீட்டிற்கு புதிதாக ஒருவரை அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *