தக் லைஃப் – சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவு… ரிலீஸ் அப்டேட்டும் வந்தாச்சு

தக் லைஃப் – சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவு… ரிலீஸ் அப்டேட்டும் வந்தாச்சு
  • PublishedSeptember 20, 2024

நடிகர் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளை கடந்து உருவாகி வரும் படம் தக் லைஃப்.

இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படத்தில் கமல்ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்துள்ளதாகவும் அவரது ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஒட்டுமொத்தமாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக படத்தின் டப்பிங் பணிகளை கமல், சிம்பு உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் தற்போது 149.7 கோடி ரூபாய்களுக்கு கைமாறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மிகப் பெரிய அளவில் விலை போய் உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

படத்தை மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் உதயநிதி உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய மாஸ் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *