Thug Life – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Thug Life – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedJune 6, 2025

கமல், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு தற்போது சுமாரான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக கமல் ப்ரமோஷனுக்கு மட்டுமே நிறைய செலவு செய்திருந்தார். அதேபோல் அவரும் பம்பரமாக சுற்றி பல மேடைகளில் படத்தை பிரமோட் செய்தார்.

ஆனால் அத்தனையும் கோவிந்தாவா என்பது போல் இருக்கிறது தற்போதைய நிலை.

கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள படம் ரிலீஸ்க்கு முன்பு டிக்கெட் முன்பதிவை பொருத்தவரையில் எல்லாமே ஹவுஸ்ஃபுல் தான்.

இதனால் முதல் நாளில் படம் 50 கோடிகளை தாண்டி வசூலித்து விடும் என கருத்து கணிப்புகள் வெளிவந்தது. ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது.

அதன்படி தக் லைப் முதல் நாளில் வெறும் 17 கோடிகளை மட்டுமே இந்திய அளவில் வசூலித்திருக்கிறது. இது பெரும் அதிர்ச்சி தான். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டது.

அதனால் கூட இந்த சரிவு இருக்கலாம். ஆனாலும் படம் அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்த சூழலில் வார இறுதியில் படம் வசூலை அள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *