அசுர வேகத்தில் தக் லைஃப் – டப்பிங் வேலைகளை துவங்கிய கமல்ஹாசன்.. வீடியோ வெளியானது

அசுர வேகத்தில் தக் லைஃப் – டப்பிங் வேலைகளை துவங்கிய கமல்ஹாசன்.. வீடியோ வெளியானது
  • PublishedJuly 29, 2024

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளனர். இதனிடையே படத்தின் டப்பிங் வேலைகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டப்பிங் வேலைகளை தான் துவங்கியுள்ளதாக சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தின் டப்பிங் வேலையை தொடங்கியுள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளது.

இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் நடந்து செல்வதாகவும் மணிரத்னத்துடன் இணைந்து டிஸ்கஷனில் ஈடுபடுவதாகவும் டப்பிங் பணிகளில் ஈடுபடுவதாகவும் அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன.

https://x.com/RKFI/status/1817795113382482306

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *