‘தக் லைப்’ படப்பிடிப்பை ரத்து செய்தார் கமல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

‘தக் லைப்’ படப்பிடிப்பை ரத்து செய்தார் கமல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedMarch 12, 2024

நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் சைபீரியா செல்ல உள்ளனர். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த நடிகர் கமல்,இந்த மாதம் சைபீரியா செல்ல இருந்தார்.

இந்நிலையில் தற்போது கமல் வெளிநாட்டு படப்பிடிப்பு ‘ஷெட்யூல்’ திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் கமல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அரசியல் பணிகளில் ‘பிஸி’ ஆகிவிட்டார்.

இதனால் படப்பிடிப்புக்காக அதிக நாட்கள் அவரால் ஒதுக்க முடிய வில்லை. இதன் காரணமாக கமல் நடிக்கும் சைபீரியா படப்பிடிப்பு காட்சிகள் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சார பணிகளில் ஈடுபடப் போவதாக கமல் அறிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சைபீரியாவில் ‘தக்லைப்’ படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வந்தன.இந்நிலையில் கமல் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *