உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அதிர்ச்சியை கிளப்பிய துப்பாக்கி பட வில்லன்..

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அதிர்ச்சியை கிளப்பிய துப்பாக்கி பட வில்லன்..
  • PublishedDecember 10, 2023

தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் இமாலய மலையில் துறவியை போல ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

43 வயதாகும் வித்யுத் ஜமால் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒட்டி வாழ்வது என்றும் ஆடைகளை துறந்து சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களை போல எந்த சொகுசு வாழ்க்கையும் இல்லாமல் காட்டில் தனிமையில் வாழ ஆரம்பித்துள்ளேன் எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

2011ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜமால்.

2012ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தில் மெயின் வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். அதே ஆண்டு வெளியான அஜித்தின் பில்லா 2 படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு நிர்வாணமாக இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்களையும், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்களையும் வித்யுத் ஜமால் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

டிசம்பர் 10ம் தேதி 1980ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் வித்யும் ஜமால். வில்லன் நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக சில இந்தி படங்களில் நடித்து வரும் வித்யுத் ஜமால் தனது பிறந்தநாளை இன்று பிறந்தமேனியாக இமய மலையில் உள்ள காடுகளிலும் நதிகளிலும் ஆதிவாசி மனிதனை போல கொண்டாடி வரும் நிலையில், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சூர்யாவின் அஞ்சான் படத்தில் நண்பனாக நடித்திருந்த வித்யுத் ஜமால் அதன் பின்னர் பாலிவுட்டில் கமாண்டோ படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து மாஸ் காட்டினார். தொடர்ந்து ஜங்க்லீ, குதாஃபிஸ், தி பவர், சனக், குதாஃபீஸ் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *