“ஸ்பைடர்மேன்” டாம் ஹாலண்ட் வைத்தியசாலையில் அனுமதி

“ஸ்பைடர்மேன்” டாம் ஹாலண்ட் வைத்தியசாலையில் அனுமதி
  • PublishedSeptember 22, 2025

ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர்மேன்- பிராண்ட் நியூ டே’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

டெஸ்டின் டேனியல் இயக்கும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது ஏற்பட்ட விபத்தில் டாம் ஹாலண்டின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் லேசாக அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்லி சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.

அதனால் டாம் ஹாலண்ட் முழுமையாக குணமடைந்த பிறகே மீண்டும் ஸ்பைடர் மேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *