ஆசிய அளவில் “டாப் 50” பிரபலங்களில் இடம்பிடித்த நம்ம தளபதி…

ஆசிய அளவில் “டாப் 50” பிரபலங்களில் இடம்பிடித்த நம்ம தளபதி…
  • PublishedDecember 18, 2023

லண்டனில் உள்ள பிரபல வார இதழான ஈஸ்டர்ன் என்ற பத்திரிக்கை ஆசிய அளவிலான டாப் 50 பிரபலங்கள் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.

அதேபால் இந்த டாப் 50 பிரபலங்களில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகை ஆலியாபட் பிடித்துள்ளார்.

அத்துடன், இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகரான தளபதி விஜய் இடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ வெற்றி படங்களை கொடுத்த விஜய் டாப் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். முதல் பத்து இடத்தில் இடம் பிடித்தவர்களில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரே பிரபலம் நடிகர் விஜய் தான்.

இதன்படி முதல் 10 இடங்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்தபட்டியலில், அமிதாப்பச்சன், அரிஜித்சிங், தீபிகாபடுகோனே, அனில்கபூர், அர்மான்மாலிக் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *