இந்த ஆண்டு சினிமாவில் நடிக்காத டாப் நடிகைகள்

இந்த ஆண்டு சினிமாவில் நடிக்காத டாப் நடிகைகள்
  • PublishedMay 23, 2025

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று.

அந்த வகையில், டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சில முன்னணி நடிகைகள் இந்த ஆண்டு ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹிந்தியில் இவரது முதல் படமான பேபி ஜான் படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு தமிழில் இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்த நடிகை சமந்தா திடீர் உடல் நிலை சரி இல்லாமல் போனதால் சற்று நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிய இவர் சொந்தமாக தயரிப்பில் இறங்கி உள்ளார். இவர் நடிப்பிலும் இந்த ஆண்டு ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த பிரியங்கா மோகன் இந்த ஆண்டு தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *