கவினுக்கு ஜோடியாகப் போகும் டாப் ஹீரோயின்.. கை கொடுத்த அனிருத்!

கவினுக்கு ஜோடியாகப் போகும் டாப் ஹீரோயின்.. கை கொடுத்த அனிருத்!
  • PublishedMarch 17, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்தும், அதில் நடிக்கும் ஹீரோயின் பற்றியும் தகவல் கிடைத்துள்ளது.

கனா காணும் காலங்கள், கல்லூரி சாலை, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் மூலம் நடிகராக அறிமுகமானவர் கவின். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, அவரை ஹீரோ மெட்டீரியலாக மாற்றியது. அதன் பின்னர் 2021ல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான லிஃப்ட் திரைப்படத்தில் கவின் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான டாடா திரைப்படமும் கவினுக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது.

டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, ஏராளமான சினிமா பிரபலங்களும் பாராட்டியிருந்தனர். திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஓடிடியிலும் ரசிகர்களிடம் டாடா படத்திற்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதனையடுத்து கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கலாம் என முதலில் சொல்லப்பட்டது. ஆனாலும், அதுகுறித்து இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஹீரோயின் இந்நிலையில், கவின் நடிக்கும் புதிய படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்தில் கவின் ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர், டான் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ப்ரியங்கா மோகன், தற்போது தனுஷ் ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

கவின் முதலில் இயக்குநர் நெல்சனிடம் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்து வந்தார். டாக்டர் படத்திலும் அவர் ஒர்க் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் சக்சஸ் பார்ட்டிக்காக நெல்சன், ப்ரியங்கா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் வெளிநாட்டில் டூர் அடித்தனர். அப்போது அவர்களுடன் கவினும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், கவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா மோகன் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

அதேபோல், கவினின் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஏற்கனவே அனிருத்துடன் நெருங்கிய நட்ப்பில் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் நெல்சனுக்கும் க்ளோஸ் ப்ரெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கவினின் புதிய படத்தில் அனிருத் கமிட் ஆகலாம் என சொல்லப்படுகிறது. முதன்முறையாக பிரம்மாண்டமான கூட்டணியில் கவின் நடிக்கவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் கவின் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *