முழங்கையால் அழுத்துவார்கள்… அத்துமீறல்களை அனுபவித்தேன் – பிரபல நடிகை

முழங்கையால் அழுத்துவார்கள்… அத்துமீறல்களை அனுபவித்தேன் – பிரபல நடிகை
  • PublishedJune 24, 2025

காக்டெயில், சல்யூட், செல்ஃபி, அசாத், சாவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டயானா பென்டி.

பாலிவுட்டில் சிறப்பாக தன்னுடைய நடிப்பால் ஈர்த்து வரும் டயானா, மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசி வம்பில் மாட்டிக்கொள்வார்.

அந்தவகையில், நடிகை டயானா பென்டி, தன் வாழ்க்கையில் கசப்பான சம்பவத்தை பகிர்ந்து தன் வேதனையை கொட்டியுள்ளார்.

அதில், மும்பையில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருப்பார்கள். இது நிசத்தமான உண்மை.

நான் கல்லூரிக்கு செல்லும்போது மின்சார ரயிலில் தான் பயணித்து வந்தேன். அப்போது முழங்கைகளால் என் உடலில் அழுத்துவார்கள், என்னை கேளி செய்து திட்டி பேசுவார்கள், இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறியது.

இவர்களை போன்ற கயவர்களை திருப்பி அடிக்கும் தன்னப்பிக்கை எனக்கு அப்போது இல்லை. அந்தவகையில் பஸ்களில், ரயில்களில் பயணிக்கும்போது தகாத தொடுதல், அத்துமீறல்களை அனுபவித்தேன், தவித்துப்போனேன் என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை டயானா பென்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *