TRP-யில் கெத்து காட்டிய சிறகடிக்க ஆசை… நீங்களே பாருங்க….

TRP-யில் கெத்து காட்டிய சிறகடிக்க ஆசை… நீங்களே பாருங்க….
  • PublishedJanuary 18, 2024

இந்த வருடத்தின் இரண்டாவது வாரத்தில், டாப் 10 TRP லிஸ்டில் இடம்பிடித்த சீரியல்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சிங்க பெண்ணே:

அப்பா, அம்மா, அக்கா என தன்னுடைய குடும்பத்திற்காக சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்து கஷ்டப்பட்டு வரும் ஆனந்திக்கு, ஹீரோவான அன்பு மீது கோவம் இருந்தாலும்.. அன்பு தொடர்ந்து ஆனந்திக்கே தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். கார்மெண்ட்ஸ் ஓனர் மகேஷும் ஆனந்தியை காதலிக்க, இருவரில் யாரை ஆனந்தி ஏற்றுக்கொள்வார் என்பது ட்விஸ்ட்டாக உள்ளது. இந்த சீரியல் இந்த வாரம் 11.72 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கயல்:

தன்னுடைய குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்த கயல், தற்போது சதியின் காரணமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். எழிலுக்கு அவரின் அம்மா தூக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட, கயலுக்கு 9 லட்சம் பணம் காட்டினாள் மட்டுமே உயிர் பிழைப்பார் என்கிற சூழ்நிலை இருப்பதால், அடுத்து என்ன நடக்குக்கும் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்… கயல் 10.81 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

வானத்தை போல:

பிரசிடெண்ட் தேர்தலில், பொன்னியை தோக்கடித்து துளசி வெற்றி பெற்ற நிலையில், கணவனின் தங்கை என்றும் பாராமல் துளசியை உறவாடி பழிவாங்க நினைக்கும் பொன்னியின் எண்ணம் ஈடேறுமா? என்கிற எதிர்பார்ப்புடன் தற்போது இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் 9.72 TRP புள்ளிகளை கைப்பற்றியுள்ளது வானத்தை போல சீரியல்

எதிர்நீச்சல்:

முதல் இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள எதிர்நீச்சல் சீரியல்… பலதரப்பட்ட பிரச்சனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனியின் அப்பா அவரின் அம்மாவை விட்டு பிரிந்த நிலையில், தற்போது தர்ஷினி கடத்தப்பட்டுள்ளார். ஜனனி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவாரா? குணசேகரன் தன்னுடைய மகளை மீட்பாரா? என மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இந்த தொடர்ந்து TRP-யில் 9.59 புள்ளிகளை பெற்றுள்ளது.

சுந்தரி

முதியோர் ஆசிரமத்தில் நடக்கும் மர்மமான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள… சுந்தரி தன்னுடைய அப்பத்தாவையே அங்கு அனுப்பியுள்ள நிலையில், மற்றொரு புறம் கார்த்தி தமிழ் தன்னுடைய மகள் என்பது தெரியாமலே பழகி வருகிறார். இப்படி பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர்… இந்த வாரம் TRP-யில் 9.33 புள்ளிகளை பெற்றுள்ளது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில், முத்து மனோஜ் பற்றிய உண்மையை அறிந்து, அவரை பற்றி அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது மட்டும் இன்றி, விரைவில் ரோகிணி பற்றிய உண்மையும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் அதிரடியாக TRP-யில் நல்ல முனேற்றதுடன் 9.08 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா

இனியா, தன்னுடைய நாத்தனார் அக்ஷயாவின் கர்ப்பமாக இருக்கும் தகவலை அனைவரிடமும் இருந்து மறைத்து, நண்பன் சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ள நிலையில், அதனை கெடுப்பதற்கும், விக்ரமிடம் கூறுவதற்கும் துடிக்கிறான் அக்ஷயாவை காதலித்து கர்பமாக்கிய காதலன். விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர்… 07.64 TRP புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி

தன்னுடைய இரண்டு மகன்களின் வாழ்க்கையிலும் இடி போல் பிரச்சனை இறங்கியுள்ள நிலையில்… அதனை எப்படி சரி செய்வது என துடித்து கொண்டிருக்கும் குடும்பத்தின் பரிதவிப்பு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது போல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் TRP-யில் 7.53 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *