தீர்ந்ததா துருவ நட்சத்திரம் பஞ்சாயத்து?.. வெளியான ஹாட் நியுஸ்

தீர்ந்ததா துருவ நட்சத்திரம் பஞ்சாயத்து?.. வெளியான ஹாட் நியுஸ்
  • PublishedJanuary 18, 2024

கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு விக்ரமை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். சூர்யாவிடம் முதலில் சென்ற இந்த கதை அதன் பிறகு விக்ரமிடம் வந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் பண பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது.

ஒருவழியாக கடந்த நவம்பர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ரிலீஸாகவில்லை.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்கு கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ரிலீஸ் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பிப்ரவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கௌதம் மேனன் தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருப்பதன் காரணமாக அதற்குள் பணத்தை செட்டில் செய்யும் முடிவில் கௌதம் இருக்கிறார். அதனால் அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் ரிலீஸாவது உறுதி என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *