அடக்கடவுளே!! இந்த குட்டிப்பொண்ணா ஹோலிவூட்டில் இந்த ஆட்டம் போது?

அடக்கடவுளே!! இந்த குட்டிப்பொண்ணா ஹோலிவூட்டில் இந்த ஆட்டம் போது?
  • PublishedJanuary 18, 2024

பிரம்மோத்சவம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவந்திகா (Avantika Vantanapu) தற்போது ஹாலிவுட்டில் Mean Girls எனும் படத்தில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக பவ்யமாக இருந்த பிரேமம் பாப்பாவா இப்படி கிளாமர் உடையில் ஆட்டம் பாட்டம் என ஹாலிவுட்டே அமர்க்களப்படுத்தி வருகிறார் என ரசிகர்கள் அதிரடியாக அவரது சோஷியல் மீடியா பக்கங்களில் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

2016ஆம் அண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரம்மோத்சவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் தான் அவந்திகா. அடுத்து மலையாளத்தில் மோகன்லால் நடித்த மனமந்தா படத்திலும், நாக சைதன்யா நடித்த பிரேமம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா படத்தில் நடித்த இவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து அசத்தி வருகிறார்.

https://twitter.com/MoviePandit/status/1746503177514688807

இயக்குநர் சமந்தா ஜெய்னே இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி உள்ள மீன் கேர்ள்ஸ் படத்தில் கரேன் ஷெட்டி கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட் முதல் ஹாலிவுட் ரசிகர்கள் வரை தனது வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பால் திணறடித்து வருகிறார் அவந்திகா.

இணையத்தில் தற்போது இவரைத்தான் இளைஞர்கள் அதிகம் தேடி இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமிடியேட்டாக ஃபாலோயர்களாக மாறி வருகின்றனர்.

அவந்திகாவின் குழந்தை பருவ க்யூட் போட்டோக்களுடன் தற்போது 18 வயதில் ஹாலிவுட் போல்டான நடிகையாக அவர் மாறியிருப்பதை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் கம்பேர் செய்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். விளம்பரம் ஒன்றில் பரத நாட்டியப் பெண்ணாக க்யூட்டாக இருந்தவரா இப்படி அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போடுகிறார் என கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *