இதுக்கு பேர் தான்யா பெரிய மனசு.. த்ரிஷா மேம் உங்களுக்கு ஒரு சல்யூட்

இதுக்கு பேர் தான்யா பெரிய மனசு.. த்ரிஷா மேம் உங்களுக்கு ஒரு சல்யூட்
  • PublishedNovember 24, 2023

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியிருந்தார். இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்டார்.

இதனையடுத்து தற்போது மன்சூர் அலிகானை மன்னிப்பதாக த்ரிஷாவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டார் மன்சூர் அலிகான். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், இறுதியாக “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது த்ரிஷாவும் மன்சூர் அலிகானை மன்னிப்பதாக ட்வீட் செய்துள்ளார். “தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு” என ஒரே வரியில் மன்சூர் அலிகானை மன்னித்துள்ளார். த்ரிஷாவின் இந்த டிவிட்டர் பதிவின் மூலம் மன்சூர் அலிகானின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *