கமல் படத்தில் இணையும் பிரபல 2 ஹீரோக்கள்… யார் தெரியுமா?

கமல் படத்தில் இணையும் பிரபல 2 ஹீரோக்கள்… யார் தெரியுமா?
  • PublishedSeptember 13, 2023

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

அக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த செய்தி கசிந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இரண்டு பிரபல ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இருவரும் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்தனர் என்பதும் மீண்டும் இந்த படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தை பின்னணியாக கொண்ட இந்த படத்தின் கதையில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிக்கிறார். இதற்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தான் சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொண்டார்.

இந்த படத்தில் இதுவரை சொல்லப்படாத ஒரு வித்தியாசமான கதை சொல்ல இருப்பதாகவும் உலகின் பல நாடுகளில் மற்றும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *